இஸ்ரேல் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் முகமது சின்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்து 100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து சுமார் 250 பேரை பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்துச் சென்றனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வர் உட்பட பல முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வாரின் சகோதரான முகமது சின்வார் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவின் புதிய தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனை அருகே நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சுரங்க அறையில் பதுங்கி இருந்த முகமது சின்வார் கொல்லப்பட்டதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.