ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19,000 லீற்றர் டீசலுடன், சந்தேக நபர்கள் நான்கு பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த டீசலை, அம்பாறைக்கு கொண்டுசெல்வதற்காக அவர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.