கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவர் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பதுளை காவல்நிலையத்தில் இன்று முற்பகல் முன்னிலையான போது முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.