ஹொரணை பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தீயை அணைக்க கொழும்பு மற்றும் களுத்துறை நகராட்சி மன்றங்களின் தீயணைப்பு படையினர் ஹொரண தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கருவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நேற்று (13) இந்த தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது .