ஹோமாகம பிரதேச சபைக்கு சொந்தமான சந்தை தொகுதியில் மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது.
அதேபோல், குறித்த உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விற்பனை நிலையத்தின் 17 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஹோமாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.