கையடக்கத் தொலைபேசி தயாரிப்பில் இந்தியா முன்னேற்றம்

0
231

புதிய தொழில்துறை தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டு முடிவடைந்த நிதியாண்டில் இந்திய கையடக்க தொலைப்பேசி ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. 

‘மேக் இன் இந்தியா’  அப்பில் கையடக்க தொலைப்பேசி (ஸ்மார்ட்போன்கள்) திட்டம் இப்போது மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதத்தை கொண்டுள்ளது.

அதைத் தொடர்ந்து 40 சதவீத கையடக்க தொலைப்பேசி ஏற்றுமதியுடன் சாம்சுங் மற்றும் மீதமுள்ள 10 சதவீத ஏற்றுமதி ஏனைய ரகங்களை கொண்டுள்ளன.  

இந்தியா தனது தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் வலுவாக முன்னேறி உலக அளவில் முத்திரை பதித்து வருகிறது.

நவீன கையடக்க தொலைப்பேசி உற்பத்தியில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அரசாங்கத்தின் முன்னுரிமைப் பட்டியலில் தொலைத்தொடர்புத் துறை உள்ளது.

புதிய தொழில்துறை தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டு முடிவடைந்த நிதியாண்டில் இந்திய நவீன கையடக்க தொலைப்பேசி ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 82,000 கோடிக்கு மேல்) தாண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.  

இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆப்பிளின் ‘மேக் இன் இந்தியா’ ஸ்மார்ட்போன்கள் இப்போது மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதத்தை கொண்டுள்ளன.

அதைத் தொடர்ந்து சாம்சுங் மொபைல் ஏற்றுமதியில் 40 சதவீதமும் ஏனைய ரக கையடக்க தொலைப்பேசிகள் மீதமுள்ள 10 சதவீத ஏற்றுமதியில் செல்வாக்கு செலுத்துகின்றன.