அடைமழையால் பதுளை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் நிலச்சரிவு

0
115

பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் நிலச்சரிவும், நிலத் தாழ்விறக்கமும் ஏற்பட்டுள்ளது.

நேற்று ( 27) அதிகாலை முதல் பெய்து வரும் அடை மழையின் காரணமாக ஹப்புத்தளை – தியத்திலாவை இடையிலான புகையிரத பாதையில் பாரிய மண்மேடு சரிவு ஏற்பட்டு புகையிர பாதை முற்றாக மூடியுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்தது.

இதனையடுத்து புகையிரத போக்குவரத்தில் தாமதத்தை கட்டுப்படுத்தும் முகமாக புகையிரத ஊழியர்கள் மழையையும் பொருட்படுத்தாது புகையிரத வீதியில் விழுந்து கிடக்கும் மண்ணை அகற்றி வீதியினை செப்பனிட்டு வருகின்றனர் . இது இவ்வாறிருக்க லுணுகலை – பிபில வீதியில் 27ஆவது மைல் கல்லிற்கு அருகில் ஏற்பட்ட நிலச் சரிவு காரணமாக பாரிய மரங்கள் வீதியில் விழுந்து போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இம் மாவட்டத்தில் தொடரும் மழையின் காரணமாக மண்மேடு சரிவு அபாயமுள்ள இடங்களில் வாழ்பவர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஏற்கனவே இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.