24 C
Colombo
Thursday, February 29, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லை!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இடங்களில் அத்தியாவசிய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மின்விநியோகம், தொடர்பாடல் முதலான துறைகளைச் சேர்ந்தவர்கள், தமது கடமைக்குரிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்ய முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கொழும்பு மாவட்டத்தின் ஐந்து பொலிஸ் பிரிவுகளில் நேற்று (22) காலை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்குளி, முகத்துவாரம் (மோதர) புளுமென்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளிலும், குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசூரிய, பன்னல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலாகிறது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது முதல் இதுவரை அதனை மீறிய 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 76 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related Articles

யாழில் தனியார் பேருந்து சேவையினர் பணிப்புறக்கணிப்பில்

யாழ் மாவட்டத்தில் தனியார் பேருந்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழிலிருந்து தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவையினர் நேற்றையதினம் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு...

புதிய கிராம சேவை அலுவலர்கள் ஆட்சேர்ப்பு: நேர்காணல் எதிர்வரும் மார்ச்சில்

புதிய கிராம சேவை அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணலை எதிர்வரும் மார்ச் 13,14, மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது காணப்படும் கிராம...

வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

திருகோணமலையில் வலம்புரி சங்கை விற்பனைசெய்ய முயன்ற இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளளனர். முல்லைத்தீவு விசேட அதிரடிப்படை முகாம் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சீனன்குடா...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

யாழில் தனியார் பேருந்து சேவையினர் பணிப்புறக்கணிப்பில்

யாழ் மாவட்டத்தில் தனியார் பேருந்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழிலிருந்து தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவையினர் நேற்றையதினம் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு...

புதிய கிராம சேவை அலுவலர்கள் ஆட்சேர்ப்பு: நேர்காணல் எதிர்வரும் மார்ச்சில்

புதிய கிராம சேவை அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணலை எதிர்வரும் மார்ச் 13,14, மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது காணப்படும் கிராம...

வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

திருகோணமலையில் வலம்புரி சங்கை விற்பனைசெய்ய முயன்ற இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளளனர். முல்லைத்தீவு விசேட அதிரடிப்படை முகாம் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சீனன்குடா...

அஸ்வெசும பயனாளிகளை, 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை : ஷெஹான் சேமசிங்க

போலியான தகவல்களை வழங்கி, அஸ்வெசும நலன்களை பெற்றவர்களிடம் இருந்து, பணத்தை மீளப் பெறவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

IMF குழு மார்ச் மாதம் 7ஆம் திகதி இலங்கைக்கு – செஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...