தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை ஆதரிக்கும் வகையில் மட்டக்களப்பு காத்தான்குடிக்கான பிரச்சார ஒழுங்குகளை
ஆராயும் கூட்டம் நேற்று மாலை காத்தான்குடியில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடிக்கான செயற்பாட்டாளர் முஹம்மட் ஹாதி, வைத்தியர் சுபைர், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் அஸீஸ்,
தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் இப்றாகீம் மற்றும் பாலமுனை செயற்பாட்டாளர் உட்பட பலரும் இதில்
கலந்து கொண்டனர்