அநுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

0
44

ஒரு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய திங்கட்கிழமை (24) மாத்தளை சந்தி குருந்தங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் கேரள கஞ்சா மற்றும் சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மிஹிந்தலை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 33 வயதுடயவர் என்பது ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.