அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு பிணை!

0
117

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னிலைபடுத்தும் போதே இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதுஇ பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த வழக்கில் இருந்தே வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமையஇ அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.