அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால், புதிய ஊழியர்களுக்கு பயிற்சி!

0
125

பல்நோக்கி அபிவிருத்தி செயலணி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தின்போது, அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் 160 பேருக்கான வரவேற்பு நிகழ்வும் பயிற்சி நிகழ்வும் இன்று இடம்பெற்றது.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் சுகாதார சேவைகள் பணிமனை
கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள், சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


முதல் நாள் பயிற்சியை சம்மாந்துறை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஆசாத் எம்.ஹனீபா, அக்கரைப்பற்று வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஆர்.ரஜாப் ஆகியோர் வழங்கினர். நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் எம்.பி.எம். வாஜித் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.