அம்பாறை காரைதீவில் சர்வதேச லயன்ஸ் கழகத்தால் உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

0
101

அம்பாறை காரைதீவில், சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட உலருணவுப் பொருட்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
லயன்ஸ் கழக பிராந்தியத் தலைவர் அனாப் ஏற்பாட்டில், லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் இஸ்மத் ஹமீடின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற
நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்துகொண்டார்.
விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன், லயன்ஸ் கழக 2ம் நிலை துணை ஆளுனர் கயா உபசேன
உட்பட பலரும் கலந்துகொண்டனர்;.
265 குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.