28.5 C
Colombo
Wednesday, April 24, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரண்மனை 4 திரைப்படம் விரைவில்!

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் வெளியாவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles