அருந்திக்க பெர்ணான்டோவுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி!

0
209

தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தும் இராஜாங்க அமைச்சராக அருந்திக்க பெர்ணான்டோ மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இவ்வாறு சத்தியபிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ராகம மருத்துவ பீடத்தின் சில மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில், விசாரணைகள் நிறைவடையும் வரையில் அருந்திக்க பெர்ணான்டோ இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.