அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனம், இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை

0
109

அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனம், இலங்கை சந்தைக்கு பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கத்துடன், உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனம், அண்மையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, யுனைடெட் பெற்றோலிய நிறுவனத்திற்கு, தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.