அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: டெய்லர் ஃபிரிட்ஸ்- கரோலினா ப்ளிஸ்கோவா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

0
98

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில்இ டெய்லர் ஃபிரிட்ஸ் மற்றும் கரோலினா ப்ளிஸ்கோவா ஆகியோர் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில்இ அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸூம்இ ஜோர்ஜியாவின் நிகோலோஸ் பாசிலாஷ்விலியும் பலப்பரீட்சை நடத்தினர்.

இப்போட்டியில்இ அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ்இ 6-4இ 6-2இ 4-6இ 7-5 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில்இ சீனாவின் வாங் ஸியுஇ செக்குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில்இ செக்குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவா 6-1இ 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.