29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆடைத்தொழிற்சாலை விடுதியில் ஐஸ் விற்பனை – ஐவர் கைது

ஹோமாகம, நியந்தகல பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை விடுதிக்குள் ஐஸ் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவரை ஹோமாகம பொலிஸார் இன்று (24) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் துபாயிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ‘ஹண்டயா’ எனப்படும் பிரபல பாதாள உலக நபரின் மைத்துனரான ‘சுக்கா’ என அழைக்கப்படும் நபரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைதானவர்களிடமிருந்து 42 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பணம், தராசுகள், பொலித்தீன் பைகள், மெழுகுவர்த்திகள் மற்றும் போதைப்பொருளை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் இதர பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

எரிபொருள் விலையில் திருத்தம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு...

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

எரிபொருள் விலையில் திருத்தம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு...

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள்...

ரிதிகமவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

ரிதிகமஇ கல்லவத்தஇ நிகபிட்டியவில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் 3 பேர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் தொடர்பில்...

காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக...