28.3 C
Colombo
Tuesday, December 5, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த 30ஆம் திகதி தாயார் குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது வளர்ப்பு நாய் தாயின் காலை பிடித்து இழுத்ததில் குழந்தையின் தலை சுவரில் மோதியதாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டில் சிறு குழந்தையும் தாயும் மட்டுமே இருந்தனர்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, குழந்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, சாதாரணமாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

குழந்தையின் தாயார் இது தொடர்பில் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் மாலையில் கணவர் வந்து குழந்தையிடம் பேசி சிறிது நேரம் கழித்து குழந்தையின் மூக்கில் இரத்தம் கசிவதை பார்த்துள்ளார். தலை சுவரில் மோதிய பகுதி நீல நிறமாக மாறியதன் காரணமாக குழந்தையை ஹெய்கொட பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் வெள்ளம் காரணமாக வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மருத்துவ சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததையடுத்து, சந்தேக மரணம் எனக் கருதி ஊறுபொக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளின் போது தாயினால் கைக்குழந்தை கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் தாயை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை ஊருபொக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச இலக்கிய விழா சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு கோறளைப்பற்றுப் பிரதேச இலக்கிய விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்தனபிரதே செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில்...

பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்!

களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலரிப்பினால் அம்பாறை மாவட்டத்தின் அழகிய கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருகிறது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பினால்;, கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருவதோடு, மீனவர்களும்சொல்லனாத் துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.கரையோரப் பகுதிகளை அண்டிக் காணப்பட்ட தென்னந் தோப்புக்களும், கடலரிப்பினால் அழிவடைந்து வருவதால், தெங்குப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச இலக்கிய விழா சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு கோறளைப்பற்றுப் பிரதேச இலக்கிய விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்தனபிரதே செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில்...

பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்!

களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலரிப்பினால் அம்பாறை மாவட்டத்தின் அழகிய கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருகிறது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பினால்;, கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருவதோடு, மீனவர்களும்சொல்லனாத் துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.கரையோரப் பகுதிகளை அண்டிக் காணப்பட்ட தென்னந் தோப்புக்களும், கடலரிப்பினால் அழிவடைந்து வருவதால், தெங்குப்...

அம்பாறை சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏ.எச்.அல் ஜவாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக, சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எச். அல் ஜவாஹிர்நியமிக்கப்பட்டுள்ளார்.சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக...

சீரற்ற காலநிலை: மலையக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...