இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும்: இந்திய இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரி தெரிவிப்பு

0
174

 சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என  இந்திய இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரி – ஓய்வுபெற்ற லெப்டினன்ட்  ஜெனரலுமான P.R.சங்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை சீன ஆய்வு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது அவர் இதனை கூறியுள்ளார்.

ஜப்பான் இலங்கையில் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதுடன், மக்கள் சார்பு திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும்  P.R.சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயம் செய்திருந்த போது, சர்வதேச நாணய நிதியத்திடம்  இலங்கை தொடர்பில்  முன்வைத்த பரிந்துரைகளையும் இதன்போது அவர் நினைவுகூர்ந்துள்ளார்.