26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்திய உயர்ஸ்தானிகர், தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு சந்திப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.


இச்சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான இந்திய அரசின் எதிர்கால செயற்பாடுகள், பங்களிப்பு தொடர்பில்
கலந்துரையாடப்பட்டது.


இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவஞானம் சிறீதரன், கட்சியின் நாடாளுமன்ற குழுவின் கொரடாவும், பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், இராசாமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறீநேசன், சண்முகம் குகதாசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles