இந்து குருமார் ஒன்றியத்தினரின்ஏற்பாட்டில் நாளை யாழில் மாபெரும் யாகம் நடாத்தப்படவுள்ளது!

0
330

கொரோனா கொடிய நோயிலிருந்து நாடும்.நாட்டு மக்களும்மீண்டு வரவேண்டும் என்பதற்காக. சகல இந்து ஆலயங்களிலும் ஹோமம்,விசேட வழிபாடுகளை செய்யுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கமைவாக.

இலங்கை அந்தணர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நாளை 08.11.2020 ஞாயிறுக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட இந்து குருமார் ஒன்றியத்தினால் மாலை 4.30 மணிக்கு வண்ணார்பண்ணை பெருமாள் ஆலயத்தில் சுதர்சன ஹோமமும் விசேட வழிபாடுகளும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக நடைபெறவிருக்கின்றன. இந்தப் பிரார்த்தனையின் ஊடாக சகல மக்களும் நோயிலிருந்து விடுபட்டு தங்களுடைய வழமையான வாழ்க்கையை வாழ பிரார்த்திக்கவுள்ளனர்.

குறித்த பூசை வழிபாட்டில் அடியவர்கள் எவரும் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வீட்டிலிருந்தவாறே கொரோனாவிலிருந்து விடுபடுவதற்காக அடியவர்களை பிரார்த்திக்குமாறு இலங்கைஅந்தணர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளார்கள்.