இன்று இரவு 7 மணிவரை வெளியாகியுள்ள அறிக்கையின் படி 414 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 62 பேரும் , பேலியகொடை மீன் சந்தை தொடர்புடையவர்கள் 352 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொட மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் இதுவரை 6145 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.