26.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது

‘தமிழ் பொது வேட்பாளரை இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக நான் பிரசாரம் செய்வேன்’. மேற்கண்டவாறு கூறியிருப்பவர் யார் என்பது நேற்றைய ஈழநாடு பத்திரிகையை படித்தவர்களுக்குத் தெரியும் என்பதால் மற்றையவர்க ளுக்கு தெரியாது என்பதல்ல. இப்படி சொல்லக்கூடியவர் யார் என்பது நமக்கெல்லாம் தெரிந்தது தான். கட்சித் தலைவர் தேர்தலில் இத்தனை பேர்தான் வாக்களிக்க இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டே தேர்தல் நடத்த அனுமதியளித்துவிட்டு தான் வெற்றி பெறவில்லை என்றதும் அந்தத் தேர்தலே தவறானது என்று பகிரங்கக் கடிதம் எழுதியவர் அவர். அந்தத் தேர்தலில் தான் வெற்றி பெறாவிட்டாலும் இப்போதும் தானே தலைவர் என்று கருதி செயல்படுபவரும் அவர்தான்.


இது எல்லாம் அவர்கள் கட்சி உள்வீட்டு சமாச்சாரம். தமிழ் பொதுவேட்பாளரை எதிர்ப்பதற்கு அவர் சொன்ன காரணம் என்ன என்பதும் ஈழநாடு வாசகர்களுக்கு தெரிந்ததுதான். சமஷ்டிக்கான மக்கள் ஆணையை கடந்த ஏழு தசாப்தங்களாக மக்கள் வழங்கிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அதற்கு பிறகு எதற்கு இந்த விஷப்பரீட்சை?. மக்கள் அவர் சொல்வதுபோல சமஷ்டி கோரிக்கைக்காகத்தான் அவர்களுக்கு இது வரை வாக்களித்தார்கள் என்றால்இ இன்னுமொரு தேர்தலிலும் அவர்கள் சமஷ்டிக்காக வாக்களிக்க மாட்டார்கள் என்று அஞ்சுவதும் அதனை விஷப்பரீட்சை என்று சொல்வதும் எதனால் என்பதுதான் தெரியவில்லை. அதனால்இ அதனை தோற்கடிப்பதற்காகத்தான் பிரசாரம் செய்வேன் என்றும் தான் நடத்திய பகிரங்க மேடையில் அவர் சவால் விட்டது நமக்கு தெரிந்ததுதான்.


கடந்த தேர்தலில்தான் வெற்றி பெறுவதற்காகவே வேறு சிலரின் உதவியை நாடிய அவர்இ இந்த பொது வேட்பாளரை தோற்கடிப் பதற்கான பிரசாரத்துக்கு யாரின் உதவியை நாடுகின்றார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதுவல்லஇ நாம் இன்று இந்தப் பத்தியில் சொல்ல வருவது. அண்மையில்இ ஈழநாடு – டான் ரீ. வி. பணிமனைக்கு வந்திருந்த அவர்இ எமது குழுமத் தலைவர் குகநாதனை சந்தித்து நீண்டநேரம் பேசியிருக்கிறார். இருவரும் பல நிமிட நேரம் நடத்திய இந்த சந்திப்பில்இ இன்றைய நிலையில் அவர் மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் பதின்மூன்றை அமுல்படுத்துவதாக கூறுவதால் அதனை நடைமுறையில் இப் போதே காட்டுவதற்கு ஏதுவாக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குகநாதன் விடுத்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண் டிருக்கிறாராம்.


இன்றைய நிலையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மூன்று வேட்பாளர்களுமே பதின்மூன்றை முழுமையாக (சிலர் பொலிஸ் அதிகாரம் இல்லாமல்) அமுல்படுத்துவதாக கூறுகின்றனர். இதற்காகஇ நாங்கள் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறும் வரை காத்திருக்கவேண்டும். ஆனால்இ அது முழுமையாக அமுல் படுத்துவதற்கு முன்னதாகவேஇ ஏற்கனவே இயங்கிய அதிகாரங்களுடன் அது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு இயக்கப்படவேண்டும்.
அதற்காக மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்தப்போவதாக சஜித் பிரேமதாஸ உறுதியளித்திருக்கிறார். ஆனால்இ அப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்படவேண்டும்.


இதற்காக ஏற்கனவே நமது சுமந்தி ரன் எம். பி. தாக்கல் செய்த தனிநபர் சட்டமூலம்இ வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுஇ உயர்நீதிமன்றின் அனுமதியையும் பெற்றுவிட்டது. சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றலாம் என்றும் உயர்நீதிமன்றம் வியாக்கியானம் சொல்லிவிட்டது. அது பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்ததும் மாகாண சபைகளுக்கு யார் வேண்டுமானாலும் தேர்தல்களை நடத்தலாம்.
இந்த விடயத்தை சுமந்திரனிடம் சுட்டிக்காட்டிய குகநாதன் உங்கள் அந்த சட்டமூலத்தை பாராளுமன்றில் விவாத்துக்கு எடுக்குமாறும் அடுத்த கட்சித் தலைவர்கள் கூட் டத்தில் வலியுறுத்திஇ அதனை பாராளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்ற முயற்சியுங்கள் என்றும் கோரிக்கை விடுத்ததாகவும் அதனை அவர் ஏற்றுக்கொண்டு நிச்சயம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அதனை செய்வோம் என்று உறுதியளித்தாகவும் நமது நிறுவனத் தலை வர் கூறினார்.


தான் இதுவரை அதனை பாராளுமன்றில் விவாதத்துக்கு எடுக்க தயங்குவதுஇ அதனை தோற்கடித்து விடுவார்களோ என்பதால் தான் என்றும் சுமந்திரன் கூறியிருக் கிறார். தனது இரண்டு வருட ஆட்சியில் எழுபத்தி ஐந்து சட்டமூலங்களை நிறைவேற்றியுள்ளதாக பெருமைப்படும் ஜனாதிபதி இந்த சட்டமூலத்தையும் நிறைவேற்றுவதற்கு சம்மதிப்பார் என்றே நம்பலாம்.


இது ஒன்றும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தையோஇ காணி அதிகாரத்தையோ வழங்கும் முயற்சி யல்லஇ கடந்த மூன்று தசாப்தங்க ளாக இயங்கிய அதே அதிகாரங்களு டன் மாகாண சபைகள் இயங்கு வதற்காக தேர்தலை நடத்துவ தற்கான சட்டமூலமே.

இதனை யாரும் எதிர்ப்பார்கள் என்று நம்புவதற்கு எந்தக்கார ணங்களும் இல்லை. அதிகம் ஏன்? தற்போதைய பாராளுமன்றத்தில் எம். பிக்களாக இருப்பவர்கள் பலர் அடுத்த தேர்தலுடன் வீட்டுக்கு போகப்போகின்றவர்கள்தான். அவர்களில் பலர் மாகாணசபைகளூடாக என்றாலும் அரசியலில் தொடர்வோம் என்று அந்த சட்டமூலத்துக்கு ஆதரவும் வழங்க முன்வரலாம்.

ஊர்க்குருவி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles