யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று மக்கள் வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.