வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால் பெருமளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அதன் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கூரியர் சேவைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரித்து வருவதாகவும், சுங்கத்துறை மற்றும் தபால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் உத்தியோகத்தர்களும் இந்த போதைப்பொருள் பொதிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.