இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலைய கட்டுமானப் பணிகள் இம்மாத இறுதியில்

0
232

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையம் 300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும். இது கெரவலப்பிட்டியிலுள்ள லக்தனவி மின்னுற்பத்தி நிலையத்தில் அமையவுள்ளது.

இது தொடர்பான யோசனையை மின்வலு எரிசக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சமர்ப்பித்திருந்தார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் தருணத்தில், கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் எனத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.