இலங்கையில் மேலும் 201 கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 37 பேர் தனிமைப்படுதல் நிலையங்களை சேர்ந்தவர்கள்,24 மீன்பிடிதுறைமுகங்களை சேர்ந்தவர்கள்,140பேர் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் என தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை பரவலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3883 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7354 ஆக அதிகரித்துள்ளது.