இலங்கையில் மேலும் 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர்களில் 3 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் மற்றும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 269 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 8129 ஆக அதிகரித்துள்ளது.