இலங்கையைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் தூசு துகள் களின் அளவு அதிகரித்துள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அண்மைய நாடான இந்தியாவில் ஏற்பட்ட வளி மாசடைவு மற்றும் நாட்டின் வளிமண்டல எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மாசடைவு ஆகியன இதற்குக் காரணம் என்றும் ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் பேரா சிரியர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என் றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், தூசு துகள்களின் செறிவு 100 முதல் 150 ஆக அதிகரித்துள்ள தாகவும் இதனால் சுவாச நோயாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தூசு துகள்களின் செறிவு அதிகரித் துள்ளதாக ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாகக் கடந்த மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப் பிட்டுள்ளார்.