29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பல கோடி ரூபா மோசடி – சஜித்

பல்லேகல, தம்புள்ளை மற்றும் கெத்தாராம ஆகிய 3 மைதானங்களுக்கும் 60×30 அடி LED திரைகளை கொள்வனவு செய்யும் போது பாரிய மூன்று மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2023 ஜூலை 14 ஆம் திகதி விலைமனு கோர முன்னரே, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஜூலை 13 ஆம் திகதியே இதற்காக 29,000 டொலர் தொகையை செலுத்தியுள்ளதாகவும், இந்த விலைமனு கோரலுக்காக Million Laugh Entertainment, Imagine Entertainment,Atom Technologies மற்றும் John Keells Automation ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றிருந்தாலும் Million Laugh Entertainment மற்றும் Imagine Entertainment ஆகிய இரு நிறுவனங்களே இறுதியாக விலை மனுக்களை முன்வைத்தகாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இங்கு,Million Laugh Entertainment நிறுவனத்தின் கேள்வியாக 360 மில்லியன் ரூபா இருந்ததாகவும்,Imagine Entertainment நிறுவனத்தின் கேள்வியாக 335 மில்லியன் ரூபாவாக இருந்ததாகவும், Imagine Entertainment பத்திரங்களில் கையெழுத்தொன்று இல்லை என்று கூறி இந்த விலைமனு கோரல் 25 மில்லியன் நஷ்டத்துடன் Million Laugh Entertainment நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது,இந்த 3 மைதானங்களுக்கும் கொண்டு வரப்பட்ட LED திரைகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும், காரணம், இதற்கான வரியாக 65 இலட்சம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாகவும்,29,000 டொலர்கள் மையப்படுத்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த 3 திரைகளுக்கும் குறைந்தது 150,000 டொலர்கள் வரியாக செலுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசுக்கு வருமானம் இல்லாததால்,பெறுமதி சேர் வரியை அதிகரித்து,மக்கள் மீது கடும் வரிச்சுமையை சுமத்தி அரசுக்கு வரவேண்டிய வருவாயை இதுபோன்ற ஊழல் நிறுவனங்கள் திருடுகின்றன என்றும்,இந்த ஊழல் கும்பலை நீக்க பாராளுமன்றம் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றினாலும், இதனால் எதுவுமே நடந்தபாடில்லை என்றும்,இந்த தகவலை வெளிக்கொணரும் போது தடைகளை ஏற்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles