31 C
Colombo
Tuesday, November 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கை தகுதி அடிப்படையில் எப்போது ஒரு தலைவரை தெரிவு செய்யும்? – மங்கள சமரவீர

அமெரிக்காவின் உபஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டதைப்போன்று இனம், மதம் ஆகியவற்றைப் புறந்தள்ளி திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவு செய்யப்போகின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வியெழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் உபஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் தெரிவாகியுள்ளனர்.

அமெரிக்காவின் முதலாவது பெண் உபஜனாதிபதி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் தனதாக்கியிருக்கும் நிலையில், உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளது.

அவ்வாறு தனது வாழ்த்துக்களை வெளிப்படுத்தும் விதமான மங்கள சமரவீர தனது ருவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

‘நம்மைச்சார்ந்த பெண்ணொருவர் உலகிலேயே மிகவும் பலம்பொருந்திய பெண்ணாக மாறியுள்ளமை தெற்காசியாவைச் சேர்ந்த அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க விடயமாகும். இதனைப்போன்று இனம், மதம், சாதி போன்றவற்றை விடுத்து திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவுசெய்யப்போகின்றது?’ என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles