இலஞ்சம் பெற்ற இரு மாநகர சபை அதிகாரிகள் கைது

0
112

சீதாவாக்க நகர சபையின் பதில் செயலாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

400,000 ரூபா இலஞ்சம் பெற்ற நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளையைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பஸ் நிலையத்தில் அண்மையில் நிறுவப்பட்ட வர்த்தக நிலையத்தின் கடை உரிமையை விரைவாக மாற்றுவதற்காக இலஞ்சம் பெற்ற தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் முடிவில் சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.