நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான உண்மை நிலையை மக்களிடமிருந்து மறைக்க அரசாங்கம் எப்போதும் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
சமூகத்தில் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் சமூக ரீதியாகப் பரவவில்லை என அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பில் அரசாங்கம் கவலைப்படவில்லை.
கொரோனா தொற்று அச்சத்தால் தொழில்சாலைகளில் பணிபுரியும் நகரம் மற்றும் கிராமங்களிலுள்ள இளைஞர், யுவதிகள் அந்தரிக்கின்றனர். தொழிலை இழந்த நிலையில் அவர்கள் உட்கொள்ள உணவு இல்லை. தங்கியிருந்த விடுதிகளுக்குச் செலுத்தப் பணம் இல்லை.
முதலாளிமார் விடுதிகளிலிருந்து இளைஞர் – யுவதிகளை அகற்ற முயற்சிக்கின்றனர்.
எனவே, அரசாங்கம் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு உதவக் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.