26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷ்யா மும்முரம்!

உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ரஷ்யா உக்ரைன் எல்லைப்பகுதியில் போர் விமானங்களை குவித்திருந்தது.
இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தன.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ரஷ்ய ஜனாதிபதித விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார்.
அத்துடன், உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு சபையின் அறிவுரையை மீறி யுக்ரைன் மீது போர் தொடுக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் எதிரொலியாக, உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையும் 100 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ரஷ்ய இராணுவ படை உக்ரைனுக்குள் நுழைந்ததற்கான அறிகுறியாக, கீவ் நகரில் வெடிகுண்டு சத்தம் ஒன்றும் கேட்கப்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, மரியுபோல் என்ற கிழக்கு துறைமுக நகரில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதுடன், உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles