24 C
Colombo
Friday, September 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலக நகரங்கள் தினம்: பிரதமர் வாழ்த்து

இலங்கையர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த நகரம் மற்றும் மிகச் சிறந்த வாழ்விற்காக உலக நகரங்கள் தினமான இன்று வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உலக நகரங்கள் தினத்தையொட்டி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

”ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அடிப்படையில் நகர்புறத்தில் மேற்கொள்ளப்படும் அடிப்படை சேவைகளின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி உலக நகரங்கள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதற்கமைய 2014ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஒக்டோபர் 31ஆம் திகதி உலக நகரங்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலகளாவிய நகரமயமாக்கல் தொடர்பில் சர்வதேச சமூகத்தினர் கொண்டுள்ள ஆர்வத்தை மேம்படுத்தல், வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளல் மற்றும் நகரமயமாக்கலின் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் போன்று நிலையான நகர்ப்புற அபிவிருத்தியில் பங்களிப்பு செய்தல் என்பன இத்தினத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

‘மிகச் சிறந்த நகரம் மற்றும் மிகச் சிறந்த வாழ்க்கை’ என்பதே உலக நகரங்கள் தினத்தின் பொதுவான கருப்பொருளாகும். நிலையான நகர்ப்புற அபிவிருத்தியின் ஊடாக நகரில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். கிராமம் மற்றும் நகரம் இடையே சமநிலையை பேணி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் போது, நகர அபிவிருத்தி என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கோட்பாடாகும்.

அனைத்து காரணிகளும் உள்ளடக்கப்பட்ட நகரமொன்றுக்குள் மனிதனின் வாழ்வு எளிதாக்கப்படும். அதேபோன்று அனைத்து தேவைகளும் பூரணப்படுத்தப்படும். நகர்ப்புறத்தை அழகுபடுத்தல், வீடமைப்பு திட்டங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக நாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நகர்ப்புற அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கினோம். நாட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதிலிருந்து அப்பால் சென்று நாடளாவிய ரீதியில் நகரங்களுக்கிடையே சமமான அபிவிருத்தியை ஏற்படுத்தும் சுபீட்சமான நோக்கை நாம் ஆரம்பித்தோம்.

நகரமயமாக்கலின் சவால்களுக்கு முகங்கொடுத்து அதற்கு தேவையான நிலையான நகர்ப்புற அபிவிருத்தியில் பங்களிப்பு செய்வதற்கு கைக்கோர்க்குமாறு உலக நகரங்கள் தினமான இன்று நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற வகையில் நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

நகரமயமாக்கலின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களை அடைவதன் மூலம் அனைவருக்கும் வளமான எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன்.

Related Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில்...

அம்பாறை நிந்தவூரில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வறிய குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் வறிய குடும்பம் ஒன்றுக்கு பகுதியளவாக நிர்மானிக்கப்பட்ட வீடு இன்று அரச சார்பற்ற நிறுவனமான பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் இன்று...