இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடியை அடுத்து தற்போது மாவட்டங்களுக்கு இடையிலாக பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரடங்கு வேளையில் வெளிச்செல்ல அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.
இதன்படி, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து அனுப்புவதன் மூலம் ஊரடங்கு அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளவிரும்புவோர் secretary@mws.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் ஊடாகவும் அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .