ஊழலை ஒழிக்க பல புரட்சிகரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று புதன்கிழமை (15) காலை திறந்துவைத்து உரையாற்றும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,கடந்த 2 வருடங்களில் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் இதன் மூலம் தெற்காசியாவில் புதிய சட்ட முறைமை செயற்படுத்தும் ஒரே நாடு இலங்கை. ஊழலை ஒழிக்க பல புரட்சிகரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம்.அரசாங்கம் திருடர்களை பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது.‘ஊழலை ஒழிப்போம்’ என்பதை அரசியல் கோஷமாக பயன்படுத்துவதைக் கைவிட்டு, புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்