எல்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து இருவர் காயமடைந்துள்ளனர்.
ஒரு தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மது அருந்திக்கொண்டிருந்த நான்கு நபர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுடப்பட்டுள்ள அதேவேளை காயமடைந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் துப்பாக்கிதாரியை தாக்கிக் காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.