ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சிஅலுவலகருக்கும் இடையில் கலந்துரையாடல்

0
50

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் ஜஸ்டினா முரளிதரனை சந்தித்து விசேட கலந்துரையாடலில் இன்று ஈடுபட்டனர்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் காண்காணிப்பாளர்களால் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் வீதிமிறல்கள், தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர். ஜனாதிபதி தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு விழக்கமளிக்கப்பட்டது.