29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஒரு முகக்கவசத்தின் பாதுகாப்புக்காலம் 4 மணிநேரம் மாத்திரமே!

முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமென சுகாதார மேம்பாடு அலுவலகத்தின் சமூக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

தொழில் நிமித்தம் வெளியில் செல்வோர் அல்லது வேறு தேவைகளுக்காக வெளியே செல்வோர் ஒரு முகக்கவசத்தை 4 மணித்தியாலமே பயன்படுத்த வேண்டும்.எனவே, வெளியே செல்லும் போது, மேலதிகமாக 2 முகக்கவசங்களை கொண்டு செல்லுவது சிறந்தது.

அதன்பின்னர், புதிய முகக்கவசத்தையே கட்டயாம் அணிய வேண்டும். மேலும் முகக்கவசங்களை ஆங்காங்கே வீசுவதனாலும் கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

முகக்கவசங்களை அணியும் போது மூக்கு, வாய் என்பவற்றை நன்றாக மூடும் வகையில் அணிய வேண்டும்” என சமூக சுகாதார பிரிவின் விசேட வைத்தியர் உத்பலா அமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles