ஒரே படத்தில் இணையும் விஜய் – அஜித்!

0
480

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் – அஜித் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர் என்று பிரபல இசையமைப்பாளரும் இயக்குநர் வெங்கட்பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இந்தியளவில் உருவாகும் திரைப்படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மங்காத்தா திரைப்படம் இருவரையும் மனதில் வைத்தே உருவாக்கப்பட்டதாக வெங்கட்பிரபு தகவல் வெளியிட்டிருந்தார். முதலே தன்னை அணுகியிருந்தால் அந்தப் படத்தில் தான் நடித்திருப்பேன் என்று விஜய் கூறியிருந்தார். மீண்டும் அவ்வாறான சந்தர்ப்பம் அமைந்தால் நடிப்பதாகவும் விஜய் வெங்கட்பிரபுவுக்கு கூறியிருந்தாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே, அஜித் – விஜய் நடிப்பில் ஒரு திரைப்படத்தை அவர் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையிலேயே கங்கை அமரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, இருவரும் திரையுலகில் அறிமுக நாயகர்களாக இருந்த சமயத்தில் – 1995ஆம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜய் – அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.