30 C
Colombo
Wednesday, March 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஒஸ்ரியத் தலைநகரில் வெடித்தது ஆயுததாரிகள் – பொலீஸ் சமர்!

ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது.
பொலீஸ் தரப்பில் ஒருவரும் ஆயுததாரி ஒருவரும் உயிரிழந்தனர் என்று முற்கொண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன. பலர் காயமடைந்துள்ளனர்.
நகரில் நேற்றரவு இரவு 8 மணி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயதபாணிகளுடன் பொலீஸார் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. நகரில் ஆறு இடங்களை ஆயுதபாணிகள் இலக்கு வைத்து தாக்கியுள்ளனர் என்று பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கறுப்பு உடை அணிந்த ஒருவர் நீளமான இயந்திரத் துப்பாக்கியுடன் ஓடுகின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஒஸ்ரிய உள்துறை அமைச்சர் இதனை “ஒரு பயங்கரவாதத் தாக்குதல்” என்று தெரிவித்திருக்கிறார். தப்பி ஓடிய ஆயுதபாணி ஒருவரைத் தேடிப்பிடிப்பதற்காக வீயன்னா நகரப் பகுதி முற்றுகையிடப்பட்டிருப்பதாக இதனை எழுதும் போது தகவல் வெளியாகியது.
நகரின் மையப்பகுதியில் உள்ள central Schwedenplatz சதுக்கத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. வேட்டுச் சத்தங்களால் பீதியடைந்த பலரும் தலைதெறிக்க ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
தாக்குதல் நடந்த சமயம் நகரின் மையப் பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் (synagogue) மூடப்பட்டிருந்ததாக வீயன்னாவில் வசிக்கும் இஸ்ரேலிய சமூகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
“நெருக்கடியான இந்தத் தருணத்தில் பாரிஸ் மக்கள் வீயன்னாவின் பக்கம் நிற்கின்றனர் ” என்று பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ தனது ருவீற்றரில் பதிவிட்டுள்ளார்.
“பிரெஞ்சு மக்கள் தங்களது நட்பு நாடான ஒஸ்ரிய மக்களோடு அதிர்ச்சியையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்” என்று அதிபர் மக்ரோன் தனது ருவீற்றர் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
” பிரான்ஸை தொடர்ந்து ஒரு நட்பு நாடு தாக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஐரோப்பியர்கள். யாருடன் மோதுகிறோம் என்பதை எதிரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் எதனையும் விட்டுவிடப் போவதில்லை “-என்றும் மக்ரோன் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வீயன்னா நிலைவரத்தை எலிஸே மாளிகை மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று இங்கே பாரிஸில் செய்தி வெளியாகி இருக்கிறது.

Related Articles

மட்டு.பட்டிருப்பு வலயத்தில் விளையாட்டு விழா

மகிழ்ச்சியான கடமைச் சூழலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில்கடமையாற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு இடையில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

மட்டு.சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில், மாணவர் வரவேற்பு நிகழ்வு

2023 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு மட்டக்களப்பு சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பட்டிருப்பு வலக்கல்வி அலுவலக கல்வி...

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பெண் ஊழியர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டு.பட்டிருப்பு வலயத்தில் விளையாட்டு விழா

மகிழ்ச்சியான கடமைச் சூழலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில்கடமையாற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு இடையில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

மட்டு.சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில், மாணவர் வரவேற்பு நிகழ்வு

2023 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு மட்டக்களப்பு சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பட்டிருப்பு வலக்கல்வி அலுவலக கல்வி...

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பெண் ஊழியர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்...

இலங்கை அதிகாரிகளுக்குத் தென்னாபிரிக்க அரசாங்கம் அழைப்பு இதனால் தென்னாபிரிக்க மனித உரிமைக் குழு அதிருப்தி

போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிகாரிகளுக்குத் தென்னாபிரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் தென்னாபிரிக்க மனித உரிமைக் குழுக்களின் கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

மன்னாரில் தெரிவுசெய்யப்பட்ட மீனவ பெண்கள் குழுக்களுக்கு நிதியுதவி

மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்களுக்கு, கருவாடு பதனிடுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சௌத்பார் மற்றும் ஓலைத்தொடுவாய்...