கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஶ்ரீலங்கன் சரக்கு பிரிவின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை உறுதி செய்துள்ளது.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
குறித்த நபருடன் சேவையாற்றிய 50 பேர் தற்போது பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது