கண்டி – யாழ் பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி!

0
162

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நாவுல – அரங்கல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியும், காரும் மோதியதில் நேற்றிரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நாவுல பகுதியைச் சேர்ந்த 76 வயது பெண் ஒருவரும், 64 வயது ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.