கத்திக்குத்தில் காயமடைந்தவருக்கு கொரோனா!- மருத்துவர்கள் உட்பட 10 பேர் தனிமைப்படுத்தல்

0
222

ஹோமாகம மருத்துவமனையில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட நபர் ஒருவருக்கு திடீரென மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நபர் மதுபோதையிலிருந்தபோது கத்திக்குத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு இந்த நபருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவருக்கு கொரோனா தொற்றிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் உட்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.