கம்பஹாமாவட்டத்தில் கடைகளில் மக்கள் வெள்ளம்!

0
230

கம்பஹா மாவட்டத்தில் இன்று காலை அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய நகரங் களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப் படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல கடைகளில் மக்கள் நிறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சுகாதார ஆலோசனையைப் பின்பற்றி பெரும்பான்மை யான மக்கள் கடைகளுக்கு அருகில் வரிசையில் நிற்கி றார்கள் என சிங்கள ஊடகம் ஒன்ற தகவலை வெளி யிட்டுள்ளது.

64 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

கம்பஹா மாவட்ட மக்களுக்கு இன்றிரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.