கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

0
105

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் மேல் நீதிமன்றத்தில் இன்று நண்பகல் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது தேரருக்கு பிணை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கடந்த 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல விகாரை தொடர்பில் ஞானசார தேரரால் கூறப்பட்ட கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.