29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்விசாரா ஊழியர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரிக்கை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் சிந்தித்து பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று (14) தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்தார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தற்போது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் நடத்தப்பட்டு வருவதாகவும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சுமார் 3500 மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

‘கோவிட்’ தொற்றுநோயால் மிகவும் சிரமத்திற்கு உள்ளான மாணவர்கள் 2022 இல் திட்டமிடப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கு 2023 இல் தோன்றி பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் படிப்பார்கள் என்றும் 2023 தேர்வு இந்த ஆண்டு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர் கையேடு தயாரிக்கும் பணி ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதும் தாமதமடைந்துள்ளதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles