கல்வி அமைச்சின் மீது ஆசிரியர் சங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு

0
136

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விலகவில்லை எனவும் மதிப்பீட்டு பணிகளுக்கான முதற்கட்ட நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அந்த சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கல்வி சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தி பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.

அவசியமான விடயங்களை அரசாங்கம் செய்தால் இவ்வாறான தேவையற்ற விடயங்களை செய்ய வேண்டிய நிலை இருக்காது.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஆசியர்கள் விலகவில்லை.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

அதேநேரம் பல்கலைக்கழக பேராசியர்களின் ஊடாகவே மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

எனினும் இதுவரையில் அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.